பெரம்பலூரில் பள்ளி வாகனங்கள் செப்.28-ல் ஆய்வு :

பெரம்பலூரில் பள்ளி வாகனங்கள் செப்.28-ல் ஆய்வு   :
Updated on
1 min read

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் 400 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திறமையான தகுதி வாய்ந்த ஓட்டுநர்களை பணியில் அமர்த்தி, உதவியாளர் உதவியுடன் வாகனத்தை இயக்கவேண்டும். வாகனத்தில் தீயணைப்பான் கருவி, முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்கவேண்டும். பள்ளி வாகன ஆய்வு சட்டத்தின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அவ்வப்போது ஆய்வு பணி மேற்கொள்வர். இதன்படி நடப்பாண்டுக்கான ஆய்வு பணி செப்.28-ம் தேதி எளம்பலூர் தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஆய்வுக்குப் பின் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in