

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்த லையொட்டி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு வசந்தி, உமா மகேஸ்வரி வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மாவட்டக் கவுன்சிலர் பதவிக்கு நந்தினி, சகுந்தலா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதிமுக உறுப்பினர்களான இவர்களது மனுக்களை தியாகதுருகம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நேற்று முன்தினம் நிராகரித் துள்ளார்.
இதையறிந்த அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு மற்றும் ஒன்றியச் செயலாளர் ஐயப்பன் ஆகியோர் அலுவலகத்திற்கு சென்று, நிராகரித்ததற்கான காரணத்தைக் கூறும்படி கேட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வரைஅலுவலக முற்றுகை, சாலை மறியல் போராட்டம் என ஈடுபட்டி ருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் நேற்று தியாகதுருகம் ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு சென்று, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு நிராகரிப்புக்கான காரணத்தைக் கூறும்படி கேட்டனர். அதேபோன்று மற்றொரு தேர்தல்நடத்தும் அலுவலர் மணிமொழியி டமும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினர் இருப்பதை அறிந்த திமுகவினர், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் தலை மையில் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நுழைந்தனர். இதை எதிர்பாராத அதிமுகவினர் பின் வாசல் வழியாக அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர், தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில், ‘அதிமுகவினர் எப்படி அலுவல கத்திற்கு வரலாம்?’ எனக் கேட்டு விட்டு, அங்கிருந்து திமுகவினர் வெளியேறினர்.
சிறிது நேரத்தில் அதிமுகவினர் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானம் செய்துவைத்து, திருப்பி அனுப்பினர்.