Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் :

திருப்பூர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், ஊட்டச்சத்து உணவு மற்றும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை வகித்தார். நிகழ்வில், 100 மாணவிகளுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்தசோகையின் அறிகுறிகள் மற்றும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவு, குறைவாக இருந்தால் ஏற்படும் விளைவுகள், அதனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வசந்தி பிரேமா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா, மேற்பார்வையாளர் பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பரிசோதனையில், ரத்த சோகை உள்ள மாணவிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்வது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x