வேலூர் விஐடி வேளாண் மாணவர்களுக்கு - தமிழகத்தில் முதன் முறையாக ட்ரோன் இயக்க பயிற்சி :

வேலூர் விஐடி வேளாண் துறை சார்பில் ட்ரோன் இயக்கம் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் விஐடி வேளாண் துறை சார்பில் ட்ரோன் இயக்கம் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

தமிழகத்தில் முதன் முறையாக விஐடி வேளாண் துறை மாணவர்களுக்கு நெற்பயிருக்கு வேப்பங்கொட்டை சாற்றை ட்ரோன் மூலம் தெளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர் விஐடி வேளாண் துறை சார்பில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேப்பங்கொட்டை சாற்றை நெற் பயிருக்கு தெளிப்பதற்கான பயிற்சியுடன் கூடிய செயல் விளக்கம் அளிக் கப்பட்டது. இதன்மூலம், விவசாயிகளுக்கு ட்ரோன்கள் பயன்பாடு, அதன் அவசியம் குறித்து விளக்கியதுடன் மாணவர்கள் இயற்கையோடு தொழில் நுட்பத்தையும் ஒன்றிணைத்து கற்றுக் கொள்வது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் முதல் முறையாக விஐடி வேளாண் துறை மாணவர் களுக்கு விவசாயத்தோடு தொழில் நுட்பத்தையும் படிக்கும் விதமாக இந்த ட்ரோன் இயக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் ட்ரோன் உதவியுடன் எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்ற செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, விஐடி வேளாண் துறை பேராசிரியர் திருமலைக்குமார் கூறுகையில், ‘‘விவசாயிகளுக்கு நெல் இயற்கை வேளாண் சாகுபடி முறைகள் மற்றும் துல்லிய பண்ணைய முறையில் ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த தொழில்நுட்ப விவரங்கள் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. அவர்களுக்கு விஐடி வேளாண் துறை வெளியிட்ட தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களும் விவசாயி களும் இயற்கை விவசாயத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ட்ரோனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியை விஐடி வேளாண் துறை மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து நடத்தியது. இதில், வேளாண் துறை தலைவர் முனைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in