தூத்துக்குடி, கோவில்பட்டி கல்லூரிகளில் தூய்மைப் பணி :

சாயர்புரம் போப் கல்லூரியில் வடிகால்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்.
சாயர்புரம் போப் கல்லூரியில் வடிகால்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்.
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை விரைவில்தொடங்கவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

சாயர்புரம் போப் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியை கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தினகரன், வசந்தி, ஸ்டான்லி தேவ பிச்சை ஆகியோர் செய்திருந்தனர்.

தூத்துக்குடி கல்லூரியில் தூய்மை பணியை முதல்வர் (பொ) கோ.நாராயணசாமி தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜே.நாகராஜன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அ. கலையரசி, தாவரவியல் துறைத் தலைவர் த.பொன்ரதி, கல்லூரி கண்காணிப்பாளர் பு.சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

தூத்துக்குடி தூய மரியன்னைகல்லூரியில் செயலாளர் அருட்சகோதரி புளோரா மேரி, முதல்வர்அருட் சகோதரி லூசியாரோஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தூய்மைப்பணிகள் நடைபெற்றன.

நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் தூய்மைப் பணி நடந்தது. கல்லூரி முதல்வர் ரா.சாந்தகுமாரி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டஅலுவலர் செ.சுரேஷ் பாண்டிமற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். இதேபோல, கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இருவார விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in