Regional02
மரம் வளர்ப்புக்கான பிரச்சார கூட்டம் :
இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘எனது கிராமம் எனது பெருமை’ திட்டத்தின் கீழ் வரும் உதகையில் உள்ள குருத்துக்குளி கிராமத்தில் ‘உலக சிறுதானியஆண்டு-2023’-ஐ கொண்டாடும் விதமாக ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரம் வளர்ப்புக்கான பிரச்சாரக்கூட்டம் நடந்தது.
மையத்தின் விஞ்ஞானிகஸ்தூரிதிலகம், மனிதர்களின்ஆரோக்கியத்துக்கு சமச்சீர் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும்,அதில் சிறு தானியங்களின் பங்கு குறித்தும் பேசினார்.மையத்தின் முதன்மை விஞ்ஞானி க.ராஜன், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி பேசினார்.
