செப்.24-ல் ஏற்றுமதி கருத்தரங்கு :

செப்.24-ல் ஏற்றுமதி கருத்தரங்கு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75-வதுசுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில்,வர்த்தக மற்றும் வணிக வாரம்அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகம் இணைந்து நடத்தும், ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வரும் 24-ம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில்நடைபெற உள்ளது. ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்றுமதிசெய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனத்தினர் பங்கேற்று, வல்லுநர்களின் விளக்கங்களைப் பெற்று பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in