

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் புஞ்சை அரசன்தாங்கல் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை துறையின் சிறப்பு வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாமண்டூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,49,800 பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தத் தொகை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவவலர் சீனுவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.