

கந்துவட்டி கொடுமையில் இருந்து பாதுகாக்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழன்டா இயக்கம், நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் டி.ராஜா, தமிழன்டா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஜெகஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி அருகே கந்துவட்டிக் கொடுமையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நாட்டுப்புறக் கலைஞர் பிரம்மராஜ் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவரிடம் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்திய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.
கந்துவட்டிக் கொடுமையில் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை மீட்க அவர்களுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதிகளில் முகாம் நடத்த வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும். கோயில் விழாக்களில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கரோனா விதிகளை பின்பற்றிநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ பாட்டில்
சென்னை தி.நகரில் காய்கறிவியாபாரம் செய்து வருகிறேன். சாத்தான்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் கடன் வாங்கினேன். இதற்காக வீட்டு பத்திரத்தை அடமானமாக கொடுத்தேன். அசல்மற்றும் வட்டியை கொடுத்துவிட்டேன். ஆனால், இன்னும் பணம்தர வேண்டும் எனக் கூறி அந்த நபர் எனது வீட்டு பத்திரத்தை தர மறுக்கிறார். மேலும், தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
அடிப்படை வசதி
வடிகால் ஆக்கிரமிப்பு
ஓட்டப்பிடாரம் தொகுதி