அம்பேத்கர் நகருக்கு தார் சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் : மா.கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல்

அம்பேத்கர் நகருக்கு தார் சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் :  மா.கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஊத்துக்குளி அருகே குடியிருப்புப் பகுதிக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஊத்துக்குளி ரெட்டியபாளை யம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை தொடக்க நிகழ்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை வகித்தார். ஊத்துக்குளி- சென்னிமலை சாலையில் இருந்து வடக்கே இருப்புப்பாதை வரையும், அதையொட்டி கிழக்குப் பகுதியில் அம்பேத்கர் நகர் வரையுள்ள மண் சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்.

ரெட்டியபாளையத்தில் இருந்து வரும் தார் சாலையில் அம்பேத்கர் நகர் நுழையும் ரயில்வே நுழைவுப் பாலத்துக்கு கீழ் வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில் கான்கிரீட் அமைத்துத்தர வேண்டும்.

அம்பேத்கர் நகருக்கு ஆற்றுக்குடிநீரை முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வீதிகளுக்கும் கான்கிரீட் சாலை அமைத்துத்தர வேண்டும். அங்கன்வாடி மையம் அமைத்துத்தர வேண்டும்.அம்பேத்கர் நகரில் மயானம்அமைக்க இடம் ஒதுக்கித்தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in