

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, சாலையோர சிறு கோயிலுக்குள் புகுந்தது.
இச்சம்பவத்தில் கோயிலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவர், மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலசந்தர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தில், கட்டுமான சாதனங்களை வாடகைக்கு விடும் கடை, மோட்டார் சைக்கிள், கோயில் ஆகியவை சேதமடைந்தன.
இதுகுறித்து, பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.