கடலூர் மாவட்டத்தில் - மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வழுதலம்பட்டு பகுதியில் நடைபெற்ற 2-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வழுதலம்பட்டு பகுதியில் நடைபெற்ற 2-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த 12-ம்தேதி ஒரே நாளில் 28 லட்சத்திற்குமேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கி மாபெ ரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டா வது முறையாக நேற்று மாபெரும்அளவில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட் டத்தில் நேற்று 640 இடங் களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி வழங் கப்பட்டது.

புவனகிரி பேரூராட்சி அலுவல கம், புவனகிரி வட்டம் பி.உடையூர், குறிஞ்ப்பாடி வட்டம் வழுதலம்பட்டு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசிமுகாம்களை மாவட்ட ஆட்சி யர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். பொதுமக்கள் ஆர்வமு டன் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனரா என ஆய்வு செய்தார். இம்முகாம்களில் அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும்ஆய்வு செய்தார்.மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் மருத்துவர் கஜபதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் ஆர்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனரா என ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in