

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி காளீஸ்வரி(45). இவர், பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த காளீஸ்வரி, துணிகளை சலவை செய்து, வீட்டு முன்பு உள்ள மின்கம்பம் தாங்கு கம்பியில் உலர வைத்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.