

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2,321 பதவிகளுக்கு நடைபெற உள்ளது. 11 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 2 பேரும், நேற்று 2 பேரும் எனமொத்தம் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் 98 ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 5 பேரும், நேற்று 16 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
274 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை 176 பேரும், நேற்று 51 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம்இதுவரை 227 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 1,938 உள்ளன. நேற்று முன்தினம் வரை 935 பேரும்,நேற்று 296 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தமாக உள்ள 2,321 பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 1,118 பேரும் நேற்று 365 பேரும் என மொத்தம் 1,483 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.