

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகம் மற்றும் சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சிறுதானிய உணவுப் போட்டியை நடத்துகின்றன.
இதுகுறித்து விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறுகையில், விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் இப்போட்டி நடைபெறும். சிறுதானியத்தை கொண்டு 2 வகை காரம் மற்றும் 2 வகை இனிப்பு செய்ய வேண்டும்.
போட்டியாளர்கள் தங்கள் இல்லத்திலேயே செய்து கொண்டு வந்து பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் 9443671084, 9500925180 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.