வாகனம் மோதி கோயில் குதிரை உயிரிழப்பு  :

வாகனம் மோதி கோயில் குதிரை உயிரிழப்பு :

Published on

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனுக்காக குதிரை ஒன்றை தானமாக வழங்கினார்.

அந்த குதிரை நேற்று காலை கோயிலிலிருந்து வழி தவறி நெடுஞ்சாலை பகுதிகளில் ஓடியது. சிறுவாச்சூர் தனியார் மருத்துவக் கல்லூரி அருகே, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குதிரை உயிரிழந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in