

கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கரூர் நகர போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கரூர் நகர போலீஸார் அங்கு சென்று தங்கும் விடுதி அறையை சோதனையிட்டபோது அங்கு 16 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 16 பேரையும் கரூர் நகர போலீஸார் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.1,87,390 ரொக்கத்தை பறி முதல் செய்தனர்.