பர்கூர் அருகே - அனுமதியின்றி எடுத்து சென்ற : கிரானைட் கற்கள் பறிமுதல் :

பர்கூர் அருகே -  அனுமதியின்றி எடுத்து சென்ற : கிரானைட் கற்கள் பறிமுதல்  :
Updated on
1 min read

பர்கூர் அருகே அனுமதியின்றி எடுத்துச் சென்ற கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பர்கூர் வட்டாட்சியர் குருநாதன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி-எலத்தகிரி பிரிவுச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்தனர். அதில், 5 கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in