பல்லடத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் - அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம் :

பல்லடத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில்  -  அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம் :
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்லடம் பேருந்து நிலையம் முன்பு அதிமுகசார்பில், அண்ணாவின் உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினருமானஎம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பரமசிவம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் வி.எம்.சண்முகம், மாவட்ட பொருளாளர் ஹரிகோபால், ஒன்றிய கழக செயலாளர்கள்சித்துராஜ், யு.எஸ்.பழனிசாமி, காட்டூர் சிவப்பிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு, பல்லடம் நகர கழக செயலாளர் ராமமுர்த்தி, பகுதி கழக செயலாளர்கள் பழனிசாமி சுரேந்தர்,பொதுக்குழு உறுப்பினர் நடராஜன்,மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயந்திலோகநாதன், பழனிசாமி, மாவட்டஅணி செயலாளர்கள் மோகன்ராஜ், சித்ராதேவி, வி.எம்.கோகுல், பல்லடம் நகர கழக பொறுப்பாளர்கள் பானு பழனிசாமி, வைஸ் பழனிசாமி மற்றும் ஒன்றிய, பகுதி, கிளை, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in