Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

ராசி இன்டர்நேஷனல் பள்ளி, பினாக்கள் கிளாசஸ் சார்பில் - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 20-ம் தேதி தொடக்கம் :

ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி - பினாக்கள் கிளாசஸ் நீட் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்களுக்கு ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி - பினாக்கள் கிளாசஸ் நீட் பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான நுழைவுத் தகுதி தேர்வு வரும் 19-ம் தேதி ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பினாக்கள் கிளாசஸ் மையங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, வரும் 20-ம் தேதி முதல், இலவச நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.

பிற மாணவர்களுக்கு, தகுதித்தேர்வின் அடிப்படையில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களுக்கு 9840337371, 9965525577 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ராசி இன்டர்நேஷனல் பள்ளிதாளாளர் எஸ்.சத்தியமூர்த்தி, பினாக்கள் கிளாசஸ் இயக்குநர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தெரிவித் துள்ளனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x