மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறப்பு :

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறப்பு :
Updated on
1 min read

தஞ்சாவூரில் ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த இயந்திரக் கிடங்கை திறந்து வைத்து ஆட்சியர் கூறியது:

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூரில் 32,680 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.இங்கு 5,040 கட்டுப்பாட்டு கருவிகள், 9,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,924 விவிபாட் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்கலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in