ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியின்போது - சுவர் இடிந்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் மரணம் :

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்ற போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஜார்க்கன்ட்டை சேர்ந்த 2 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அவர்களது சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்ற போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஜார்க்கன்ட்டை சேர்ந்த 2 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அவர்களது சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடிமதிப்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர்வடிகால் அமைக்கும் பணியில், ஜார்கன்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலையில் அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலையோரத்தில் வீடுகளின் சுவரை ஒட்டி தோண்டினர். தொடர்ந்து, அதில் சிமென்ட் தளம் அமைப்பதற்காக கம்பிகட்டும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் ஜார்க்கன்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஹிராத் ( 23), அமித்(21) ஆகிய 2 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தூத்துக்குடி தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புபணியில் ஈடுபட்டனர். இடுபாடு களுக்குள் சிக்கிஉயிரிழந்த நிலையில் கிடந்த பாஹிராத், அமித்ஆகியோரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த மற்றொரு தொழிலாளிதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்தை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் சாரு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தூத்துக்குடி வடபாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in