மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தொடக்கம் :

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட நெடும்பலம் பகுதியில் நேற்று, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கேச் சென்று மருந்து மாத்திரைகளை வழங்குகிறார் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன். உடன், ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்துக்குட்பட்ட நெடும் பலம் பகுதியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதையொட்டி, நெடும்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திட்டத்தை தொடங்கி வைத்து, அதற்கான வாகனத்தை கொடியசைத்து வழியனுப்பினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆக.5-ம் தேதி முதற்கட்டமாக தொடங் கப்பட்டு, தற்போதுவரை 5,666 தொற்றுநோயாளிகள், அவரவர் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் மீதியுள்ள 9 வட்டங்களுக்கும் விரிவுபடுத்துகின்ற வகையில், தற்போது திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட நெடும்பலம் பகுதியில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in