சமையல் காஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி - மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
Updated on
1 min read

சமையல் காஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் பேசினர்.

மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி, மாவட்ட பொருளாளர் இ.வசந்தி, மாநிலக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் என்.வெற்றிச் செல்வி ஆகியோர் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையில் முறைகேட்டை தடுத்து நிறுத்தவேண்டும். வேலை நாட்களை 200 ஆகவும், ஊதி யத்தை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை விவசாய வேலை களுக்கு பயன்படுத்த வேண்டும். ஏழைகள் பயன்பெறும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

பயோமெட்ரிக் முறையை கைவிட வேண்டும். ஏழைமக்கள் பாதிக்கப்படுவதால், ரேஷன் அட்டையில் உள்ள என்பிஹெச் ஹெச் குறியீட்டை நீக்கவேண்டும். குடும்பத் தலைவிகள் அனைவ ருக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும்.

குடி மனைப்பட்டா இல்லாதவர் களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருத்துறைப்பூண்டியில்...

திருமருகலில்...

வேப்பூரில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in