கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர் நேரடி சேர்க்கை :

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர் நேரடி சேர்க்கை :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர் நேரடி சேர்க்கை இன்று (14-ம் தேதி) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2021-22-ம் ஆண்டிற்கான இளங்கலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவியர்கள், கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக இன்று (14-ம் தேதி) விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in