சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 13 Sep, 2021 03:15 AM
Published : 13 Sep 2021 03:15 AM Last Updated : 13 Sep 2021 03:15 AM
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தனிப்படை போலீஸார் விசாரிக்கச் சென்றபோது ஓட முயன்றனர். போலீஸார் விரட்டிப் பிடித்து விசாரித்ததில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (27), மீனாட்சி (35) என்பதும் தற்போது திருச்சியில் வசிப்பதும் தெரியவந்தது. காரைக்குடி பகுதியில் பேருந்து, கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து 17 பவுன் நகைகளை காரைக்குடி குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT