Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் : 14 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு :

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 14 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது.

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெறுகிறது. கோவையில் இத்தேர்வுக்கு ஏழு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கோவையில் குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி, சூலூர் ஆர்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரி,  கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, மேட்டுப்பாளையம்  சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி, கற்பகம் உயர்கல்வி நிறுவனம், நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 6,057 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள், கண்காணிப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில், ‘நீட்’ தேர்வு 7 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வெழுத 3 ஆயிரத்து 28 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் 480 பேர், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில் 480 பேர், விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் 420 பேர், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 420 பேர், பாலா மெட்ரிகுலேசன் பள்ளி யில் 420 பேர், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் 328 பேர், உடுமலை விசாலாட்சி மகளிர் மகளிர் கல்லூரியில் 480 பேர் தேர்வெழுத உள்ளனர்.

தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் தேர்வர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உடல் வெப்பநிலை அதிகம் உள்ள மாணவர்களை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யவும், அதன் பின்னரும் வெப்பநிலை அதிகம் இருந்தால் முழு கவச உடை அணிந்து தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்வர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x