டிஎன்சி சிட்ஸ் நிறுவன புதிய கிளை கிருஷ்ணகிரியில் திறப்பு :

கிருஷ்ணகிரியில் டிஎன்சி சிட்ஸ் நிறுவன கிளை அலுவலகத்தை பர்கூர் எம்எல்ஏ மதியழகன், குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் டிஎன்சி  நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர்.
கிருஷ்ணகிரியில் டிஎன்சி சிட்ஸ் நிறுவன கிளை அலுவலகத்தை பர்கூர் எம்எல்ஏ மதியழகன், குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் டிஎன்சி நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

டிஎன்சி சிட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரியில் நடந்தது.

தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு டிஎன்சி சிட்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் கடந்த 65 ஆண்டுகளாக செயல்படுகிறது. கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை  விஜய் வித்யாலயா ஸ்டேடியம் அருகே டிஎன்சி சிட்ஸ் நிறுவன கிளை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, டிஎன்சி நிர்வாக இயக்குநர் இளங்கோவன் தலைமை வகித்தார். புதிய அலுவலகத்தை பர்கூர் எம்எல்ஏ மதியழகன் திறந்து வைத்தார். முதல் காசோலையை ராஜேஷ் ரெடிமேட்ஸ் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பிகேபிஎம் தலைவர் போஜ்ராஜ் வர்மா, முன்னாள் காவல் துறை அலுவலர் முரளி பங்கேற்று பேசினர். டிஎன்சி இயக்குநர்கள் மீனா இளங்கோவன், பிரேம், சினேகா, விஜய் வித்யாலயா பள்ளி தலைவர் டிஎன்சி மணிவண்ணன், தீபக் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இவ்விழாவுக்கு, நிறுவனமண்டல இயக்குநர்கள் ப்ரித்திராஜ் வர்மா, பிரதாப்ராஜ் வர்மா, விவேகானந்தன், பார்த்திபன் பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடு களை கிளை மேலாளர்கள் கேசவன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக, மண்டல பொறுப்பாளர் ஹரி நன்றி கூறினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in