செப்.12-ல் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் : நூறு சதவீத இலக்கை எட்டும் அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

செப்.12-ல் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் :  நூறு சதவீத இலக்கை எட்டும் அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக செப்.12-ம் தேதி 700 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் குறைந்தது 75 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதத்தை எட்டும் அலுவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) சிவராணி, மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ் வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

தேனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in