ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த ஓமியோபதி மருத்துவர் கைது :

ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த ஓமியோபதி மருத்துவர் கைது :
Updated on
1 min read

ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை தருமபுரி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (54) என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருந்து மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதாக கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டா் சுப்பிரமணி, எஸ்ஐ சிவராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். அதில் அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதும், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்ததும் தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in