அனைத்து விவசாயிகளுக்கும் - உழவர் அட்டை வழங்க வலியுறுத்தி : கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் :

அனைத்து விவசாயிகளுக்கும் -  உழவர் அட்டை வழங்க வலியுறுத்தி : கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் அட்டை வழங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ‘வேளாண் விளை பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் லாபகரமான விலை வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும்.எண்ணே கொல்புதூர் வாய்க்கால் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் அட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மாது, கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in