1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது :

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது :
Updated on
1 min read

வேப்பூர்- சேலம் சாலையில் காஞ்சிராங் குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கவியரசன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 30 மூட்டைகளில் மொத்தம் 1,500 கிலோரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.போலீஸார் மினி லாரியில் இருந்தவர் களிம் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மங்களூர் புதுக்காலணி பகுதியை சேர்ந்த சேவான் சித்திரவேல் (59), திட்டக்குடி ஆதனூர் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24) என்று தெரியவந்தது. இருவரும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை கோழி தீவனத்திற்காக சேலம் தலைவாசலுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in