ரூ.2.63 கோடி மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது :

ரூ.2.63 கோடி மோசடி செய்ததாக  அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது :
Updated on
1 min read

மரக்காணம் அருகே ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், அப்பகுதியில் உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, அங்கு பணியாற்றி வந்த வேனூர் அருகே நாவற்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமசாமி(49) என்பவரிடம் தொடர்பு ஏற்பட்டது. கல்லூரி படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்த பிரகாஷ், ஆசிரியர் ராமசாமியிடம் தொழில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ராமசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சக்திவேல்(43), விழுப்புரம் மாவட்டம் கோலியனுரைச் சேர்ந்த கவுசல்யா(40) ஆகியோர் நில வணிகம் செய்வதாகவும், அவர்களிடம், ‘ரூ.1 லட்சம் கட்டினால், மாதம் ரூ.18 ஆயிரம் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார். இதை நம்பிய பிரகாஷ், தனக்கு தெரிந்தவர்கள் 25 பேரிடம் இருந்து ரூ.2.63 கோடியை பெற்று சக்திவேல், கவுசல்யா, அவரது மகன் கவியரசன் ஆகியோரிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி, பணத்தை தராமல், மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளி ஆசிரியர் ராமசாமி, கவுசல்யா, சக்திவேல் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in