சங்கராபுரத்தில் - ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு :

சங்கராபுரத்தில் -  ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

சங்கராபுரத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜெகதீஸ்வரன் (10) மற்றும் வெங்கடேஷ் மகன் கார்த்திக் (6) ஆகிய இருவரும் பள்ளி திறக்கப்படாத நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் ஜெகதீஸ்வரனின் சகோதரிக்கு உணவளிக்க இருவரும் சென்றனர்.

நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற் றோரும் பல இடங்களில் தேடியும் சிறுவர்கள் கிடைக் காததால், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸாரும் தேடிவந்த நிலையில், சங்கராபுரம் தனியார் பள்ளிக்குப் பின்புறமுள்ள கல்லிக்குட்டை எனும் சித்தேரியில் சடலங்கள் மிதப்பதை அறிந்து, நேற்று காலை தீயணைப்பு படையினருடன் சடலத்தை மீட்டுள்ளனர்.

அப்போது சடலமாக மீட்கப் பட்டது மேற்கண்ட சிறுவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிறைந்து வருகின்றன.

நீர் ததும்பி நிற்கும் இந்த நீர்நிலைகளில் இளஞ்சிறார்கள் வீட்டிற்குத் தெரியாமல் குளிப்பதிலும், மீன் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சிறுவர்களும் அதே போல் குளிக்கும் ஆர்வத்தில் அங்கு இறங்கி இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் அசாம்பாவிதம் நிகழ்ந்ததா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in