ஏஐடியுசி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

ஏஐடியுசி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

ஏஐடியுசி போக்குவரத்துக்கழக தொழி லாளர்கள் சங்கம் சார்பில் நேற்று தஞ்சாவூர், நாகை, கரூர், புதுக்கோட் டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். அரசுப் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை உடனுக்குடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு பேட்டாவை உயர்த்தி வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், 2020 மே முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க வேண்டும். புதிய மருத்துவத் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் மருத்துவத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் கரந்தை புறநகர் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.தில் லைவனம், ஏஐடியுசி சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு மண்டல பொருளாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மகேந்திரன், மாநில துணைத் தலைவர் கோபிநாதன், முன்னாள் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஐடி யுசி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.சங்க பொதுச்செயலாளர் ஓ.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை புறநகர் கிளை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சங்கத்தின் துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட் டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், மாவட்டச் செயலாளர் வீ.சிங்கமுத்து, சம்மேளன துணைத் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in