

திருப்பூர்: வால்ரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.எஸ்.பி.டேவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் காட்டன் துணிகளின் ஆதிக்கத்தில் இருந்தபோதும் தரமான பாலியஸ்டர் துணிகள், லைக்கிரா, டிரைபிட் போன்ற மிகவும் மிருதுவான, தடிமனான பேண்ட் வகை ஆடைகள் தயாரிக்கும் வகையிலும், பாலியஸ்டர் துணிகள் தயார் செய்யும்போதே அதில் நூல்களின் கவுண்ட்ஸ்-ஐ தரமான துணிகள் கிடைக்கும் வகையிலும் மாற்றங்கள் செய்து, திருப்பூர் மக்களுக்கு 100-க்கும் அதிகமான தரங்களில் பாலியஸ்டர் துணிவகைகளை வழங்குகிறோம். எங்கள் தயாரிப்பில் உருவான துணிகள் மீண்டும்மீண்டும் அணிய தூண்டும் வகையில் மிருதுவாகவும், வியர்வையை உறிஞ்சும் தன்மையுடனும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தயாரிப்பாளர்கள் எங்களிடம் துணிகளை வாங்கி ஆடைகள் தயார் செய்து, அதை எங்களிடமே 5 சதவீத லாபத்தில் விற்று பயனடையலாம். ஊரடங்கு காலத்திலும் எங்கள் துணி மற்றும் ரெடிமேட் ஆடைகளை எங்களின் வெப்சைட்டான யெஸ்இண்டியாகேன் மூலம் பெற்று மொத்த வியாபாரம் செய்யலாம். பலதரப்பட்ட கடைகள் மற்றும் மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இன்று ஜிஎஸ்எம் அதிகமுள்ள மற்றும் குறைவான லைக்ரா எக்ஸிகியூட்டிவ் பேண்ட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இவ்வகை தயாரிப்புகளில் ஆர்வமுடைய ஆடை தயாரிப்பாளர்கள், இவ்வகை பேண்ட்களை தாங்களே ரூ.200 முதல் ரூ.250-க்குள் தயார் செய்யமுடியும். இவ்வகை பேண்ட்கள் திருப்பூருக்குள் ரூ.999-க்கு பஜாரில் விற்கின்றனர். அது எங்களிடம் ரூ.285-க்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்படி முயற்சித்து வருகிறோம். இவற்றை எங்களது ஈகாமர்ஸ் வெப்சைட் யெஸ்இண்டியாகேன் மூலம் ஆன்லைனிலும் விற்கிறோம். ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாரந்தோறும் தள்ளுபடி விற்பனையும் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.l