தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் - போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி :

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில்  -  போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி  :
Updated on
1 min read

தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. கின்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து தலைமை வகித்தார். அகாடமி முன்னாள் மாணவரும், தமிழக கூட்டுறவு துறையில் தூத்துக்குடி மேலூர் சார்பதிவாளருமான வி.நாகராஜ் முன்னிலை வகித்தார். அகாடமியின் முன்னாள் மாணவரும், தமிழக பொதுப்பணித் துறை உதவி பொறியாளருமான ஆறுமுகராஜ் வரவேற்றார். தமிழக வணிக வரித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் கே.கலையரசன் குரூப் 4- க்கான முதல் வகுப்பை தொடங்கி வைத்தார்.

ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி பேராசிரியை இ.வாசுகி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தமிழக பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளரும், கின்ஸ் அகாடமி முன்னாள் மாணவருமான ஆர்.சிவகுருநாதன் நன்றி கூறினார். பி.ராஜபூபதி, எஸ்.ரேகா, இ.தமிழ்தரணி உள்ளிட்ட பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு போலீஸ் பணிக்கான பயிற்சி வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என, அகடாமி நிறுவனர் பேச்சிமுத்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in