செங்கல்பட்டு மாவட்டத்தில் - 10 பேருக்கு நல்லாசிரியர் விருது :

செங்கல்பட்டு மாவட்டத்தில் -  10 பேருக்கு நல்லாசிரியர் விருது :
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த விருதுகளை வழங்கினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பேசியதாவது:

ஆசிரியர்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதள வகுப்புகள் மூலம் பாடங்களை பயிற்றுவித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்து வருகின்றனர். தமிழக அரசு மாணவர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்க பாடுபடும் ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

2021-22-ம் கல்வியாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கியுள்ளது. அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.ரோஸ் நிர்மலா, மாவட்டகல்வி அலுவலர் அ.நாராயணன், ஆசிரியர் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in