வ.உ.சி. பிறந்த நாள் விழா: சிலைக்கு முன்னாள் அமைச்சர் மாலை :

வ.உ.சி. பிறந்த நாள் விழா: சிலைக்கு முன்னாள் அமைச்சர் மாலை :
Updated on
1 min read

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருத்தங்கல், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் வ.உ.சி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்துக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் தலைமையில் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோடு சஞ்சீவிநாதபுரம் திருவள்ளுவர் மன்ற அலுவலகம் முன்பு அமைந்துள்ள வ.உ.சியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த விழாவில் நகரத் தலைவர் அ.மணிகண்டன் தலைமையில் அரசரடி பேருந்து நிறுத்தம் அருகே வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in