திருப்பூர் மாநகரில் திருட்டுப்போன - ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு :

திருப்பூர் மாநகரில் திருட்டுப்போன -  ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் ரவி (குற்றம் மற்றும் போக்குவரத்து), அரவிந்த் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர், திருப்பூர் மாநகரில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைநடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய 53 பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ.7.38 லட்சம் ரொக்கம், 19 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கரவாகனம், அலைபேசிகள் என மொத்தம் ரூ.25.88 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

இவற்றை உரியவர்களிடம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே. வனிதா நேற்று ஒப்படைத்தார்.அதன்பின் அவர் பேசும்போது ‘‘திருப்பூர் மாநகரில், ரூ.1000மதிப்பிலான அலைபேசிகள் வழிப்பறி செய்யப்பட்டாலும், அதுதொடர்பான புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

வெளி மாநிலங்கள் மற்றும்மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in