சமூக நீதிக்காக பாடுபடுவோர் - தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :

சமூக நீதிக்காக பாடுபடுவோர் -  தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சி யர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பொரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதினை பெறுவோ ருக்கு ரூ.1 லட்சத்துடன் ஒரு பவுன் தங்க பதக்கமும்,தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2021ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம்,சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் கவனத்தில் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.

விருது பெறுவதற்கான விண் ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள்யுடையவராயின் அதற்குரிய ஆதாரங்களை மெய்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு வரும்30-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in