

விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்த தம்பதி ஜெயராமன் - விஜயராணி. ஹோட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் உறவினர் திருமணத்துக்குச் சென்று வந்த ஜெயராணி, வீட்டில் உள்ள பீரோவில் நகைகளை வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பீரோவைத் திறந்தபோது நகைகள் திருடு போயிருந்தன. விருதுநகர் கிழக்கு போலீஸார் நடத்திய விசாரணையில், ஜெயராமன் வீட்டுக்கு வந்த உறவினர் பெரியபேராலியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாலாஜி(33) நகைகளை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்தனர்.