மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் - புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் -  புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்
Updated on
1 min read

மத்திய கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப் படுகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவி களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

2021-22-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த மாணவர்கள், ‘இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக்கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5’ அல்லது மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ளமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலர்களிடம் சென்று அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

2021-22-ம் நிதியாண்டில் புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

அந்தந்த கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பித்தினை பரிந்துரை செய்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in