Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் - 10 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன்அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.ரவி, ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஆர்.சந்தான கிருஷ்ணன், பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி.முத்துக்குமார், திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஏ.ஆல்பர்ட் மனோகரன், பரமக்குடி ஒன்றியம் கலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி.நிர்மலாதேவி, ராமநாதபுரம் ஒன்றியம் வாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ்.பரமேஸ்வரன், திருப்புல்லாணி ஒன்றியம் சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பி.டார்த்தி கரோலின், திருப்புல்லாணி ஒன்றியம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.செங்கோல் திரவியம், திருப்புல்லாணி ஒன்றியம் க.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எம். முனீஸ்வரி, ராமநாதபுரம் ஒன்றியம் ராமநாதபுரம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஐ.ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகிய 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x