ஆணைமடுவு நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க 9-ம் தேதி பொது ஏலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆணைமடுவு நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க 9-ம் தேதி பொது ஏலம் :  சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஆணைமடுவு நீர்தேக்கத்தில் மீன் பிடிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஏலம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துசேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம் புழுதிக்குட்டை அருகேயுள்ள ஆணைமடுவு நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட வரும் 9-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆணையர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் பிணைவைப்புதொகை ரூ.7,122 சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆணையரின் பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். மேலும், டெண்டர் ஆவணத்தின் விலை ரூ.560 மீனவர் நலத்துறை ஆணையரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வரைவோலை எடுக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளி விண்ணப்ப படிவத்தை மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி மதியம் 12-மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரம் பெற மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டூர் அணை, கொளத்தூர் ரோடு, சேலம் மாவட்டம் என்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tenders.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அலுவலக தொலைபேசி எண்.04298 – 244045 மூலமும் தொடர்பு கொள்ளாலம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in