நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர அழைப்பு :

நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர அழைப்பு :
Updated on
1 min read

நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன, என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்தினால் மரணம் ஏற்பட்டால்ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரையும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10, 11-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1,000, 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுபோல் பிளஸ் 2 படிக்கும் மற்றும் தேர்ச்சி பெற்ற பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1,500 வழங்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மேலும் விவரம் அறிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண் 28-ல் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். நலத்திட்ட உதவிகள் பெற உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in