காணாமல் போன 101 செல்போன்கள் மீட்பு :

காணாமல் போன 101 செல்போன்கள் மீட்பு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020-2021-ம் ஆண்டில் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின்படி 101 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டன. சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணையில் கடந்த ஒரு மாதத்தில் மீட்கப்பட்ட இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், 101 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி விஜயகுமார், சிறப்பாக பணியாற்றிய சைபர் கிரைம் போலீஸாரை பாராட்டி, வெகுமதி அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.பி விஜயகுமார் கூறியது: சைபர் கிரைம் குற்றங்கள் நிகழாதவாறு பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி விநாயகர் ஊர்வலங்கள் நடைபெற்றால், சட்டரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in