திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்வு : பழங்கரை ஊராட்சியில் 5-ம் தேதி ஆலோசனை கூட்டம்

திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்வு :  பழங்கரை ஊராட்சியில்  5-ம் தேதி ஆலோசனை கூட்டம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், வரும் 5-ம் தேதி காலை10 மணிக்கு, பழங்கரை ஊராட்சியில் அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் ரபா கே.ஆர்.ஆர் மண்டபத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்தில், தொடர்புடைய ஊராட்சி, பேரூராட்சியின் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in