பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு - தமிழக அரசு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் : இந்து முன்னணி வலியுறுத்தல்

பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு -  தமிழக அரசு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் :  இந்து முன்னணி வலியுறுத்தல்
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,தமிழகம் முழுவதும் கோயில்களில்இந்து முன்னணியினர் வழிபாடுநடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள குலாலர் விநாயகர் கோயில் முன்பு நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் பங்கேற்றார். தொடர்ந்து அப்பகுதியிலேயே மறியல் போராட்டம் நடந்தது.இந்நிலையில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 10-ம் தேதி திட்டமிட்டபடி, 1.25 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உள்ளோம்.கடந்த முறை, 5 லட்சம் வீடுகளில்விநாயகர் சிலைகளை வைத்தனர்.இதைவிட, அதிகமாக வைத்து வழிபட திட்டமிட்டுள்ளோம். உடனடியாக, இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

காங்கயம் பழையகோட்டை சாலையிலுள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in