ரெட்டியார்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை :

தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப் பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே தருமத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி, ஏ.டி.காலனியில் 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தருமத்துப்பட்டி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஊராட்சித் தலைவர் மருதமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மருதமுத்து உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in